அதிமுக ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் பாஜக ஒரு சீட் கூட வாங்க முடியாது : அடித்து சொல்லும் எம்எல்ஏ!!!

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2023, 7:38 pm

அதிமுக ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் பாஜக ஒரு சீட் கூட வாங்க முடியாது : அடித்து சொல்லும் எம்எல்ஏ!!!

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் அதிமுகவுக்கு புரட்சி பாரதம் என்றும் உறுதுணையாக இருக்கும் என்று புரட்சி பாரதம் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பாஜகவை எதிர்த்தாலோ, அவர்களது கூட்டணியில் இருந்து வெளியேறினாலும், அமலாக்கத்துறை சோதனை நடத்தி நெருக்கடி தந்து வருகிறது பாஜக.

எதிர்த்தால் அமலாக்கத்துறை சோதனை என அராஜகம் செய்து வருகிறது பாஜக. தமிழ்நாட்டில் பாஜகவின் அமலாக்கத்துறை சோதனை ஒருபோதும் எடுபடாது. அராஜகம், மிரட்டல், அச்சுறுத்தல் உள்ளிட்டவைகள் இங்கு எடுபடாது.

பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் வாழ்ந்த பூமி இது, திராவிட பாரம்பரியம் இருக்கின்ற பூமி, இதில் அவர்களை அவதூறாக பேசி, விமர்சனம் செய்து அரசியல் செய்ய நினைத்தால் அது கண்டிப்பாக நடக்காது.

அதிமுக ஆதரவால் தான் 4 சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக பெற்றிருக்கிறது. அதிமுக ஆதரவு இல்லையெனில் தமிழகத்தில் ஒரு சீட் கூட பாஜகவால் வெல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் அதிமுக – பாஜக இடையே ஏற்பட்ட தொடர் மோதலால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. இது பாஜக தலைமைக்கு பெரும் அடியாக அமைந்தது. தமிழ்நாட்டில் கணிசமான முறையில் வெற்றி பெற வேண்டும் என்ற நினைப்பில் இருந்த பாஜகவுக்கு பேரடியாக அமைந்தது.

தலைவர்கள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிய கருத்தால், இந்த கூட்டணி முறிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. பாஜவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு அதிமுக, வரும் தேர்தல்களில் புதிய கூட்டணி அமைப்போம் எனவும் அதிமுகவினர் கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை அடுத்து அதிமுகவுக்கு பூவை ஜெகன் மூர்த்தி ஆதரவு அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தொடர்ந்து அங்கம் வகிக்கும் என கூறியிருந்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!