வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை.. வசமாக சிக்கிய பெண்.. விசாரணையில் ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan13 August 2025, 4:08 pm
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 5.5 லட்சம் நகையை கொள்ளை அடித்த பக்கத்து வீட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கோவை, சரவணம்பட்டி அருகே சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.
இவருடைய மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணி உள்ளார். இவர்களுடன் வெங்கடேஷின் பெற்றோர் மற்றும் பாட்டி ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி வெங்கடேஷ் தாயாருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வீட்டின் அவருடைய 96 வயதான பாட்டி சரஸ்வதி மட்டும் தனியாக இருந்தார்.
மாலையில் வெங்கடேசன் மனைவி வீடு திரும்பிய போது மூதாட்டி காயம் அடைந்த நிலையில், கீழே கிடந்தார், பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்து பொருட்கள் கீழே சிதறி கிடந்தன.
பீரோவில் இருந்த 8.5 பவுன் நகை காணவில்லை அதன் மதிப்பு ரூபாய் 5.5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதை அடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில ஒரு பெண் வெங்கடேசன் வீட்டுக்குள் செல்வதும் சிறிது நேரம் கழித்து அவர் வெளியே திரும்பி வருவதும் பதிவாகி இருந்தது.
உடனே அந்த பெண் யார் ? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் அந்த பெண் பக்கத்து வீட்டைச் சேர்ந்த மணிகண்டனின் மனைவி தீபா என்பதும், அவர்கள் தலைமறைவாக இருப்பதும் தெரிய வந்தது.

எனவே அவர் தான் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகையை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து வீட்டில் பதுங்கி இருந்த தீபாவை போலீசார் கைது செய்தனர்.
அவர் தனது வீட்டில் மறைத்து வைத்து இருந்த 8.5 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
