ரூ.11 லட்சம் கடனுக்காக ரூ.2.5 கோடி மதிப்பு சொத்தை அபகரிக்க முயற்சி: கோவை திமுக பிரமுகர் மீது பெண் புகார்..!!

Author: Rajesh
1 March 2022, 1:52 pm
Quick Share

கோவை: ரூ.2.5 கோடி மதிப்பிலான வீட்டை திமுக பிரமுகர் அபகரிக்க முயற்சிப்பதாக காவல் ஆணையரிடம் பெண் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் தென்னமநல்லூர் பகுதியை சேர்ந்தவர் திலகவதி இவருக்கு கோவை சாய்பாபா காலணி, பாரதி பார்க் பகுதியில் 2.5 கோடி ரூபாய் மதிப்புலான வீடு உள்ளது. இந்த நிலையில் தனது சொந்த தேவைக்காக பணம் தேவை பட்டதால் சாய்பாபா காலணி பகுதியில் உள்ள தனது வீட்டின் பத்திரத்தை வைத்து வங்கி கடன் பெறமுயற்சி செய்துள்ளார்.

அதற்காக தனக்கும் தனது குடும்பத்தார்க்கும் நன்கு பழக்கமுள்ள கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரான சன்ரைஸ் சுரேஷ் என்பவரை அனுகியுள்ளார். சன்ரைஸ் சுரேஷ்மீது ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு திமுகவை சேர்ந்த கேபிள் மணி என்பவரை கத்தியால் குத்திய வழக்கும் நிலுவையில் உள்ளது.

சன்ரைஸ் சுரேஷ் தன்னிடம் வங்கி கடன் கேட்டுவந்த திலகவதிக்கு பண உதவி செய்வதாக கூறி பெருந்துறையை சேர்ந்த மாணிக்கம் என்பவரை அழைத்துவந்து திலகவதிக்கு அறிமுகம் செய்துவைத்துள்ளார். தொடர்ந்து ரூ.2.5 கோடி மதிப்புடைய தனது வீட்டின் ஆதாரங்களை வைத்து முதல் தவனையாக மாணிக்கம் 8 இலட்சம் ரூபாயை திலகவதிக்கு கொடுத்துள்ளார். மேலும் சில நாட்கள் கழித்து 3 இலட்ச ரூபாய் என மொத்தம் 11 இலட்ச ரூபாயை கடனாக கொடுத்துள்ளனர்.

இரண்டு மாதங்கள் கழித்து திலகவதி தான் வாங்கிய பணத்தை வட்டியுடன் சேர்த்து கொடுப்பதற்காக சன்ரைஸ் சுரேஷை சந்தித்துள்ளார். அவர் திலகவதியிடம் பணத்தை பெற்றுகொள்ளாமல் அலைகழித்துள்ளார். இதனால் தனக்கு பணம் தந்த பெருந்துறையை சேர்ந்த மாணிக்கத்தை சந்தித்து பணத்தை கொடுத்துள்ளார்.

அவரும் பணத்தை வாங்காமல் திலகவதியை அலைகழித்து மட்டுமல்லாமல் வாங்கிய பணத்திற்கு வட்டியுடன் ரூ.50 இலட்சம் வேண்டும் என்று மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ந்துபோன திலகவதி செய்வதறியாது நீண்டும் சன்ரைஸ் சுரேஷை சந்தித்துள்ளார் அவரும் திலகவதியை ஆபாசமாக பேசி மிரட்டியதாக தெரிகிறது.

இந்தநிலையில், திலகவதிக்கு பின்புலத்தில் யாரும் இல்லை என்பதை புரிந்துகொண்ட திமுக பிரமுகர்கள் திலகவதியின் 2.5 கோடி மதிப்புள்ள வீட்டை ஆட்டைய போட முடிவு செய்து திமுக வழக்கறிஞர்களான சிவகுமார், மற்றும் மகுடபதி என்ற இருவரையும் கூட்டு சேர்த்துகொண்டு திலகவதியின் வீட்டை அபகரித்து வீட்டின் முன்பு வழக்கறிஞர்கள் என்ற பெயர்பலகையை மாட்டிவைத்துள்ளனர்.

இதனால் தனது வீட்டிற்குகூட செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கிறார் திலகவதி. இதனால் அதிர்ச்சியடைந்த திலகவதி கோவை சாய்பாபா காலணி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட சாய்பாபா காலணி காவல்துறையினர் புகாருக்குள்ளானவர்கள் திமுகவினர் என்பதால் அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கும் திலகவதி,

அதற்கு பதிலாக திலகவதியை அழைத்து எங்கள் மீதே புகாரளிக்கிறாயா என்று கூறி ஆபாசவார்த்தைகளால் திட்டி, கடுமையாக தாக்கியதாக கூறுகிறார். வீட்டை அபகரித்துள்ள வழக்கறிஞர்கள் இரவு நேரத்தில் மதுபோதையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் பெண்களை அழைத்துவந்து தங்குவதாகவும் தெரிவிக்கும் அவர் மாடியில் உள்ள வீட்டிற்குகூட என்னால் செல்லமுடியவில்லை என்று தெரிவிக்கின்றார்.

இதனால் செய்வதறியாது கடைசியாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து தனது 2.5 கோடி மதிப்புள்ள வீட்டை மீட்டுதருமாறு புகாரளித்து. பத்திரிக்கையாளர்களை சந்தித்து தனது உள்ளக்குமுறல்களை வேதனையுடன் பதிவு செய்தார்.

Views: - 500

0

0