ஆம்புலன்ஸ் மோதி பெண் பலி… உரிமம் இல்லாத ஓட்டுநரை கைது செய்த போலீஸ்..!

Author: Udayachandran RadhaKrishnan
12 June 2025, 1:21 pm

கோவையில் ஓட்டுநர் உரிமம் (LLR) மட்டும் வைத்துக் கொண்டு, உரிய பயிற்றுநர் இல்லாமல் ஆம்னி ஆம்புலன்ஸை அதிவேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் ஒரு பெண் உயிரிழந்தார்.

கோவை கவுண்டம்பாளையம், பிரபு நகரைச் சேர்ந்த நீலாவதி (60) என்பவர் பீளமேடு, தண்ணீர் பந்தல் ரோடு, மகேஷ் நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார்.

இதையும் படியுங்க: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நூல் விடுகிறார்.. அது நடக்காது : அமைச்சர் நேரு விமர்சனம்!

நீலாவதி தனது வீட்டிற்குச் செல்வதற்காக அவிநாசி சாலை, பீளமேடு வரதராஜா மில் எதிரே உள்ள சாலையைக் கடந்து, வரதராஜா மில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்து இருந்தார்.

அப்போது, அந்த வழியாக வந்த தனியார் ஆம்னி ஆம்புலன்ஸ் மோதி நீலாவதி தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த இது குறித்து அக்கம், பக்கத்தினர் கோவை கிழக்குப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நீலாவதி மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Woman dies after being hit by ambulance... Police arrest unlicensed driver

பின்னர் ஆம்புலன்ஸை ஒட்டி வந்த ஓட்டுனரிடம் நடத்திய விசாரணையில், சேலத்தில் இருந்து கோவைக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாமல், வெறும் LLR மட்டும் வைத்துக் கொண்டு,அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் மதன்குமார் (23) என்பவர் இந்த ஆம்புலன்ஸை ஓட்டி வந்ததாகக் விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கிழக்கு போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் மதன்குமாரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!