35 சவரன் நகையுடன் ரூ.14 லட்சம் மோசடி: கணவர், மாமியார் மீது புகாரளித்த பெண்…4 பேர் மீது வழக்குப்பதிவு..!!

Author: Aarthi Sivakumar
22 September 2021, 5:47 pm
Quick Share

கோவை: 35 பவுன் நகை, ரூ 14 லட்சம் வாங்கி ஏமாற்றி விட்டதாக பெண் ஒருவர் கணவன் மற்றும் மாமியார் மீது புகார் அளித்துள்ளார்.

வடவள்ளி நகராஜபுரம் கே.ஜி கார்டன் சிட்டியை சேர்ந்தவர் உமா (30). இவர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பது, எனக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தேன். இருவருக்கும் விவாகரத்தாகிவிட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு பார்த்திபன் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டேன். திருமணமாகி சில நாட்களில் என் கணவர் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து என்னிடம் தகராறு செய்தார். என்னிடமிருந்த 35 பவுன் நகை, என்னுடைய பெற்றோரிடம் இருந்து ரூ.14 லட்சம் வாங்கினார்.

அதைத்திருப்பி கேட்டபோது தன்னை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார். இதற்கு அவரது தந்தை கருணாநிதியும், தாயார் நிர்மலாவும் உடந்தையாக உள்ளனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இது தொடர்பாக வடவள்ளி போலீசார் கணவர் பார்த்திபன், மாமனார் கருணாநிதி, மாமியார் நிர்மலா ஆகியோர் மீது மோசடி, தாக்குதல், கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 209

0

0