ஒன்றரை வயது குழந்தையுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை: பணி முடிந்து வீடு திரும்பிய கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…

11 September 2020, 11:55 pm
Quick Share

சென்னை: புழல் அடுத்த காவாங்கரை பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக ஒன்றை வயது குழந்தையுடன் தாய் தூக்கிட்டி தற்கொலை செய்து கொண்ட குறித்து வழக்கு பதிவு செய்து புழல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவருடைய மனைவி பாக்கியலட்சுமி. இருவரும் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு மித்ரன் என்ற ஒன்றை வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பாக்கியலட்சுமி குழந்தையை அடித்ததாக கூறப்படுகிறது. இதனை கணவரான ரஞ்சித் கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த பாக்கியலட்சுமி கணவர் வேலைக்கு சென்று இருந்த நேரத்தில் தனது ஒன்றை வயது குழந்தையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பாக்கியலட்சுமியின் மாமியார் வந்து பார்க்கும் போது கதவு திறக்கபடாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இருவரும் தூக்கில் தொங்கியுள்ளனர்.
இது குறித்த தகவலறிந்து வந்த புழல் போலீசார் இருவரது உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0