சுவர் இடிந்து பெண் பலியான சம்பவம் : அமைச்சர் சிவி சண்முகம் ரூ.1 லட்சம் நிதியுதவி!!

28 November 2020, 3:59 pm
CV shanmugam- Updatenews360
Quick Share

விழுப்புரம் : நிவர் புயலில் சுவர் இடிந்து உயிரிழந்த ராஜேஸ்வரி குடும்பத்திற்கு தன் சொந்த நிதியில் இருந்து சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் 1 லட்சம் நிதி உதவி மற்றும் பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையை நேரில் சந்தித்து வழங்கினார்.

விழுப்புரம் அடுத்து உள்ள கோனூர் கிராமத்தில் கடந்த 25 ஆம் தேதி இரவு நிவர் புயல் காரணமாக சுவர் இடிந்து விழுந்து ராஜேஸ்வரி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் இவரது மகன் ஆதித்யா என்பவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று கோனூர் கிராமத்தில் சென்று சுவர் இடிந்து உயிரிழந்த ராஜேஸ்வரி குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.

சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தன் சொந்த நிதியில் இருந்து 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார் மேலும் பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையையும் அவரது குடும்பத்தாரிடம் வழங்கினார்.

Views: - 29

0

0