உல்லாசத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட பெண் : சிக்கன் கிரேவி சாப்பிட்ட தாய்-மகள் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்..!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2021, 11:25 am
Chicken Gravey Issue -Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு, குளிர்ப்பானம் குடித்த தாய் – மகள் – உயிரிழப்பு விவகாரத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது அம்பலமான நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன் என்பவருடைய மனைவி கற்பகம் (வயது 34) மற்றும் அவரது மகள் தர்ஷினி (வயது 7) இருவரும் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் கடந்த 12ந்தேதி சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்டு, குளிர்பானம் குடித்த போது திடீரென இருவரும் மயங்கி விழுந்தனர்.

கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலன் இல்லமால் தாய், மகள் இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கிரேவி, குளிர்பானம் தான் காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவர்கள் சாப்பிட்டதாக கூறும் உணவு மற்றும் குளிர்பான பாட்டில்கள் ஆய்வுக்கு அனுப்பட்டன.

மேலும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் தலைமையிலான குழுவினரும் ஆய்வு செய்து, இருவரும் உணவின் காரணமாக நேரிடையாக இறக்கவில்லை, பூச்சி மருந்து கலக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதையெடுத்து போலீசார் வழக்கு விசாரணையை வேறு திசைக்கு மாற்றினர். கற்பகம் பயன்படுத்தி வந்த செல்போனை ஆய்வு செய்த நிலையில் கற்பகம் வீட்டின் அருகே இருக்கும் வீரப்பெருமாள் (வயது 34) என்பவர் கற்பகத்திற்கு தன்னுடன் இருக்கும் படி தொடர்ந்து வற்புறுத்தி வந்தது, இவருக்கும் இடையே வாட்ஸ் அப் உரையாடல் மூலமாக தெரியவந்துள்ளது.

இதற்கு கற்பகம் மறுத்து வந்துள்ளார். தன்னுடன் வரவில்லை என்றால், ஏற்கனவே இருவரும் ஒன்றாக இருந்த போது எடுத்த படம் மற்றும் வீடியோவை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரும் காட்டி விடுவேன் என்று மிரட்டிய குறுந்தகவலும் அதில் இருந்தது தெரியவந்து.

இந்த சூழ்நிலையில் கணவர் மற்றும் குடும்பத்தினருடம் புகைப்படத்தை காட்டி விட்டால் தனக்கு அவமானம் ஏற்பட்டு விடும் என்று கருதிய கற்பகம் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து தானும், அவரது மகளும் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதையெடுத்து போலீசார் வீரப்பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் குளிர்பானம் சாப்பிட்டு சென்னையில் சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், சிக்கன் கிரேவி சாப்பிட்டு குளிர்பானம் குடித்ததால் தாயும் மகளும் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் கணவருக்கு தெரியாமல் வேறு ஒருவருடன் உல்லாசம் அனுபவித்து மாட்டிக்கொண்டு விடுவோமா என்ற அச்சத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 670

0

0