கற்பை அழித்தவனை கைது செய்யுங்க.. ஒரு மாதமாக போராடும் பாதிக்கப்பட்ட பெண்!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2024, 11:49 am

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் தாலுகா வடவாத்தி கிராமத்தை சேர்ந்தவர் சகாயராணி.

கூலி தொழிலாளர் சகாயராணி கணவனை விட்டு பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். குழந்தைகள் இருவரும் வேளாங்கண்ணியில் ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் நிலையில் அவர் மட்டும் வீட்டில் தனிமையாக இருந்துள்ளார்.

இந்தநிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ரெனிஸ் என்பவர் கடந்த 28.10.2024 அன்று இரவு 11 மணி அளவில் வீட்டில் தனிமையில் இருந்த சகாய ராணியை பலவந்தமாக கட்டாயப்படுத்தி கற்பழித்துள்ளார்.

கற்பழிக்கப்பட்ட சகாயராணி ஆவுடையார் கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தன்னை கட்டாயப்படுத்தி கற்பழித்த ரெனிஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி கரூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

புகார் மனுவை பெற்ற காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் ஒரு மாத காலமாக அலை கழித்து வைத்துள்ளனர்.

இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான சகாயராணி அவருடைய சகோதரர் ஜோசப் அருளுடன் சேர்ந்து நீதி வேண்டிய கரூர் காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையும் படியுங்க: அதிகாலையிலேயே ‘மனிதன்’ பட பாணியில் சம்பவம்.. சாலையோரத்தில் இருந்த 5 தமிழர்கள் உயிரிழப்பு!

மேலும் பாதிக்கப்பட்ட சகாயராணி மற்றும் அவருடைய சகோதரர் ஜோசப் அருள் ஆகியோர் நம்மிடம் தெரிவிக்கையில் குற்றம் சுமத்தப்பட்ட ரெனிஸ் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக தன்னுடைய குடும்பப் பெண்களை குறி வைத்து இது போன்ற பல அத்துமீறிய செயல்களை செய்ததாகவும், ஜோசப் அருளின் பள்ளி செல்லும் பெண் குழந்தையை கட்டாயப்படுத்தி கற்பழித்ததாகவும் இது குறித்து அறந்தாங்கி அனைத்து மத காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து போக்சோ வழக்கு பதிய இருந்த நிலையில் உரிய நடவடிக்கை இல்லாமல் அந்த வழக்கு பாதியில் இருப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

Woman Give Rape Complaint To Youth

மேலும் அவர்களின் இத்தகைய செயல் தங்கள் குடும்ப பெண்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும் தங்கள் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வேண்டியும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ரெனிஸ் மீது காவல்துறையினர் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!