ஆற்றங்கரையோரம் சிக்கிய பெண் : போராடி மீட்ட பேரிடர் படை!!

28 November 2020, 9:21 pm
Lady Rescue - Updatenews360
Quick Share

வேலூர் : குடியாத்தம் அருகே ஆற்றங்கரையோரம் சிக்கிக் கொண்ட பெண்ணை பத்திரமாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வங்க கடலில் உருவான புயலால் தமிழக ஆந்திர எல்லையோரம் கனமழை பெய்தது இதனால் மோர்தானா அணைக்கு நீர்வரத்து அதிகரித்து சுமார் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் குடியாத்தம் கௌவுண்டன்யா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் குடியாத்தம் செதுக்கரை பகுதியை சேர்ந்த எல்லம்மாள் என்பவர் ஆற்றங்கரையோரம் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஆற்றங்கரையோரம் உள்ள கால்நடைகளை பார்ப்பதற்காகச் சென்றுள்ளார்.

அப்போது ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படவே ஆற்றங்கரையோரம் சிக்கிக் கொண்ட நிலையில் இன்று காலை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் எல்லம்மாளை பத்திரமாக மீட்டனர். இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.