கணவனுடன் சண்டை… 30 அடி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் ; 4 மணிநேரம் போராடிய தீயணைப்பு துறையினர்..!

Author: Babu Lakshmanan
26 April 2023, 1:23 pm

கன்னியாகுமரி ; கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே கணவனுடன் ஏற்பட்ட தகராறால், கோபத்தில் 30 அடி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மனைவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே அரமன்னம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மனைவி ஷிபா (37). இவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த ஷீபா வீட்டின் முன் உள்ள 30 அடி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

உடனே அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் முன் பொதுமக்களும் மீட்பு பணியில் இறங்கிய நிலையில், சுமார் நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின் குழித்துறை தீயணைப்பு துறை வீரர்கள், ஷோபாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து குலசேகரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!