கடனை திருப்பி தராததால் மரத்தில் பெண்ணை கட்டி வைத்து தாக்கிய விவகாரம்.. போலீசார் செக்..!!

Author: Udayachandran RadhaKrishnan
17 June 2025, 2:24 pm

சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது

காவல்துறையினரின் தகவலின்படி, நாராயணபுரத்தைச் சேர்ந்த திம்மராயப்பா, அதே கிராமத்தைச் சேர்ந்த முனிகண்ணப்பாவிடம் 80,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். கடனின் சுமையைத் தாங்க முடியாமல் கிராமத்தை விட்டு வெளியேறிய நிலையில், அவரது மனைவி சிரீஷா (28) சாந்திபுரம் மண்டலத்தில் உள்ள கெஞ்சனபள்ளியில் உள்ள தனது பிறந்த வீட்டில் தங்கி, பெங்களூரில் கூலி வேலை செய்து தனது மகனைப் பராமரித்து வந்தார்.

இந்நிலையில், நாராயணபுரம் பள்ளியில் தனது மகனின் மாற்றுச் சான்றிதழ் (டிசி) பெற வந்த சிரீஷாவை, முனிகண்ணப்பா, அவரது மனைவி முனெம்மா, மகன் ராஜா மற்றும் மருமகள் ஜகதீஸ்வரி ஆகியோர் பிடித்து, கணவர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று சிரீஷாவை கயிற்றால் மரத்தில் கட்டி, ஆபாசமாக திட்டி, முகத்தில் உமிழ்ந்து, கட்டைகளால் தாக்கி அவமானப்படுத்தினர்.

Woman tied to a tree and attacked for not repaying a loan

இந்த தாக்குதல் அவரது மகனின் கண்முன்னே நடந்தது, அவன் அழுதபோதும் தாக்கியவர்கள் இரக்கம் காட்டவில்லை என்பது உள்ளூர் மக்களிடையே கடும் கோபத்தை தூண்டியுள்ளது.

சிரீஷாவை மரத்தில் கட்டி தாக்கியதை அறிந்த உள்ளூர் மக்கள் மூலம் தகவல் பெற்ற காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணை மீட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!