கோவையில் ஆதரவற்ற நிலையில் சுற்றிய பெண் : ரயில் டிக்கெட் எடுத்து செலவுக்கு பணம் கொடுத்த போலீசார்!!

Author: Udayachandran
3 October 2020, 4:03 pm
Train Ticket - updatenews360
Quick Share

கோவை : காரமடை அருகே ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த பெண்ணை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த போலீசார் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவினர்.

கோவை மாவட்டம் காரமடை காவல் எல்லைக்குட்பட்ட காரமடை அரங்கநாதர் கோவில் முன்பு ஆதரவற்ற நிலையில் 35 வயது பெண் ஒருவர் சுற்றித்திரிந்து உள்ளார். இதனைக்கண்ட காரமடை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் ஆந்திரா மாநிலத்தை விஜயவாடா சேர்ந்தவர் சாந்தி கடந்த ஜனவரி மாதம் முதல் காரமடையில் சுற்றித் திரிந்தவரை நேற்று காரமடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு நாகராஜ் மற்றும் போலீசார் அந்தப் பெண் சாந்திக்கு தனது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் விஜயவாடா செல்ல ரயில் பயணச்சீட்டு எடுத்துக் கொடுத்தார்.

மேலும் அந்தப் பெண்ணின் செலவுக்காக பணம் ரூ.1000 மற்றும் தேவையான உணவு கொடுத்து ஆட்டோ மூலம் கோவை ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைத்து ஆந்திர மாநிலம் செல்ல வேண்டிய ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Views: - 52

0

0