சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பிரபல தனியார் மருத்துவமனையில் கொடூரம்!

Author: Udayachandran RadhaKrishnan
29 May 2025, 11:09 am

செங்குன்றம் அடுத்த பெருங்காவூர் அருகே தர்காஸ் சிங்கிலிமேட்டை சேர்ந்தவர் நசிமா. இவர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாடியநல்லூர் ஶ்ரீ வெங்கடேஸ்வரா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இதையும் படியுங்க: பிரபல நடிகருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனை செல்லும் போது உயிர் பிரிந்த சோகம் : தமிழ் திரையுலகம் ஷாக்!

அவருக்கு சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது, வார்டு பாய், சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து, மருத்துவமனை நிர்வாகத்திற்க்கு தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

woman who came for treatment was sexually harassed in private hospital

இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் சார்பில் காவல்துறைக்கு புகார் அளித்தனர். காவல்துறையினர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ராஜ்குமார் என்ற ஊழியரை கைது செய்து அழைத்து சென்றனர்.

இதை அடுத்து தொடர் சிகிச்சை பெற விரும்பாததால், மருத்துவமனையில் நடந்த சம்பவங்களால் சிகிச்சை பெற விருப்பமில்லாமல் வெளியேறுவதாகவும் அவரது உறவினர்கள் மருத்துவமனை வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

..

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!