கோவில் திருவிழாவில் தகராறு…விலக்கி விடச் சென்ற பெண் அடித்துக்கொலை: ஆத்திரத்தில் நேர்ந்த கொடூரம்..!!

Author: Rajesh
19 April 2022, 5:30 pm
Quick Share

திருச்சி: துறையூர் அருகே கோவில் விழாவில் இரு தரப்புக்கு இடையேயான தகராறில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செல்லிப்பாளையம் அம்பேத்கர் நகரில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது.

அம்மன் வீதி உலா நிகழ்ச்சிக்காக சாமி சிலையை யாருடைய டிராக்டரில் ஏற்றுவது என்பது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மகன்கள் சந்திரசேகர் கார்த்திக் ஆகியோருக்கும், அதேப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பான வினோத் முரளிதரன் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு கோயிலருகே எழுந்துள்ளது.

இந்த நிலையில் அம்பேத்கார் நகர் தெற்கு பகுதியில் உள்ள தன் வீட்டுக்கு சந்திரசேகரும் அவருடைய தம்பி கார்த்திக்கும் சென்ற போது அங்கிருந்த அருள் முரளிதரன் ஆகிய இருவரும் சேர்ந்து பிரசாந்த், வினோத் மற்றும் உறவினர் பாண்டியன் ஆகியோர் தாக்கியுள்ளனர்.

மகன்கள் தாக்கப்படுவதை நேரில் பார்த்த அவர்களுடைய தாய் சிவகாமி சண்டையை விலக்கி விட சென்றார். அப்போது அவரும் தாக்குதலுக்குள்ளாகி கீழே விழுந்து காயமடைந்த அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

தகவலறிந்து திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார், முசிறி டிஎஸ்பி அருள்மணி, துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீஸார் நேரில் சென்று விசாரித்தனர். சிவகாமியின் பிரேதத்தை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத விசாரணைக்காக அனுப்பிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Views: - 826

0

0