மாடுகளை தேடி சென்ற பெண் மாயம்.. காட்டுக்குள் சடலமாக மீட்பு : அதிர்ச்சி தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
15 July 2025, 12:58 pm

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா காரணிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜலாலுதீன் மனைவி பர்வீன்(41). ஜலாலுதீன் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக இறந்த நிலையில் மனைவி பர்வீன் தனது இரண்டு மகள்களுடன் காரணிக்காடு கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

பர்வீன் தினந்தோறும் ஆடு மாடுகளை வைத்துக்கொண்டு சிறு சிறு விவசாய பணிகளை செய்து வாழ்ந்து வந்த நிலையில் நேற்று மாலை தனது வீட்டில் உள்ள மாடுகளை காணவில்லை எனக் கூறி அதை தேடி செல்வதாக சென்றவர் நேற்று இரவு வரை வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

தாய் பர்வீன் இரவு முழுவதும் வீடு வராத நிலையில் அவருடைய மகள்கள் கூறிய சம்பவத்தை தொடர்ந்து கிராமத்து இளைஞர்கள் மற்றும் உறவினர்கள் காணாமல் போன பர்வினை தேடி கிராமத்தில் பல பகுதிகளில் தேடி வந்துள்ளனர்.

Woman who went looking for cows disappears.. Body recovered in the forest: Shocking information!

இந்த நிலையில் காரணிக்காடு அடுத்து உள்ள கருங்கோழி காடு கண்மாயில் காணாமல் போன பர்வீன் தண்ணீரில் மூழ்கி படியும் அவர் மீது துணி சுவைக்கும் கல்லை வைத்து அமுக்கிய படி சடலமாக கண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறை தகவல் தெரிந்த நிலையில் விரைந்து வந்த காவல்துறையினர் சடளமாக இருந்த பர்வினை உடலில் மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இறந்த பர்வின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததால் அவரை யாரேனும் அடித்து கொலை செய்தார்களா? அல்லது கற்பழித்து கொலையா? என்ற கோணத்தில் காவல் துறை விசாரித்து வரும் நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வரும் பட்சத்தில் அதற்கான முடிவு கிடைக்கும் என காவல்துறையில் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை வேளையில் குடும்ப பெண் ஒருவர் கண்மாயின் சடளமாக கிடந்த தகவல் காரணிக்காடு மற்றும் பல பகுதிகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!