ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருந்த இளம்பெண்… ஒன்றுகூடிய ஊர்மக்களால் அடித்துபிடித்து எஸ்கேப்… ஷாக் சம்பவம்!!

Author: Babu Lakshmanan
12 August 2023, 2:41 pm

குமரி அருகே இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பர்களுடன் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் தனிமையில் இருந்ததை கண்ட ஊர்மக்கள் அவர்களை மடக்கி பிடிக்க முயலும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

குமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது ஆண் நண்பர்களுடன் ஆள்நடமாட்டம் இல்லாத கடலோர பகுதியான இடப்பாடு பகுதிக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர். இதனை கண்ட அந்த பகுதியை சேர்ந்த ஊர்மக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போது, கஞ்சா போதையில் காணப்பட்ட இளைஞர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களோடு சேர்ந்து இள்மபெண்ணும் வாக்குவாதத்தில் ஈடுபட, சுற்றி இருந்தவர்கள் அதனை வீடியோ எடுத்துள்ளனர் இதனை கண்ட அந்த பெண் வீடியோ எடுப்பவர்களை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வரும் நிலையில், இளம் சமுதாயத்தினர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி, இது போன்று வாழ்க்கையை இழந்து பரிதவிக்கும் அவலத்திற்கு ஆளாகி வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?