பெண்ணின் கையெழுத்து போட்டு மோசடி : வங்கியில் ரூ.3 லட்சம் கையாடல் செய்தவன் கைது!!

16 January 2021, 10:26 pm
Fraud Arrest - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் பெண் ஒருவரின் கையெழுத்தை போட்டு அவரது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை ஆர்எஸ் புரம் டிபி சாலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பெண் ஒருவர் வங்கிக் கணக்கு வைத்துள்ளார். இதில் அவரது கணக்கில் இருந்து 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் குறைந்தது.

இதுகுறித்து அவர் ஆர்எஸ்புரம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் காசோலை மூலம் பெண்ணின் கையெழுத்தை போட்டு மர்ம நபர் ஒருவர் பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து பணத்தை கையாடல் செய்த நபரை போலீசார் தேடி வந்தனர். அப்போது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹிமான் குமார் சுபத்ரா என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Views: - 0

0

0