கையை கட்டிக்கொண்டு ஆற்றில் குதித்த பெண்கள்! வறுமையால் எடுத்த முடிவு!!

15 September 2020, 12:54 pm
Family Sucide Poverty- updatenews360
Quick Share

கன்னியாகுமரி : சுசீந்திரம் அருகே வறுமை காரணமாக குளத்தில் விழுந்து  தாய் மற்றும் இரு மகள்கள் தற்கொலையில் ஈடுபட்ட நிலையில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இளைய நயினார் குளத்தில்  3 பெண்கள்  நீரில் மூழ்கி இருப்பதாக சுசீந்திரம் போலீசாருக்கும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் மூன்று பேரையும் நீரில் இருந்து மீட்ட நிலையில் ஒருவர் உயிருடனும்  2 பேர் உயிரிழந்த நிலையிலும் காணப்பட்டனர்.

உயிருடன் இருந்த பெண் கன்னியாகுமரி  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் உயிருடன் மீட்கப்பட்டவரிடம் போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில், உயிருடன் மீட்கப்பட்டவர் பெயர் சச்சு (வயது 40) எனவும், உயிரிழந்தவர்கள் தாயார்  பங்கஜம் (வயது 70), மற்றும் சகோதரி மாலா (வயது 48) எனவும் தெரிய வந்துள்ளது.

அவர்கள் மூன்று பேரும் தனிமையில் வாழ்ந்த நிலையில் உணவிற்கு  வழியின்றி இருந்த்தாகவும், வறுமை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து குளத்தில் கைகளை ஒருவருக்கு ஒருவர் கட்டி கொண்டு குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.