மின் பாதைகளுக்குள் வரும் மரக்கிளைகளை அகற்றும் பணி மும்முரம்: அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதை தவிர்க்க ஏற்பாடு..!!

Author: Aarthi Sivakumar
30 June 2021, 12:53 pm
Quick Share

கோவை: கோவையில் மின் வயர்களுக்கு இடையே செல்லும் மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.

கோவை மின் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் வயர்கள் மீது உராயும் படி செல்லும் மரக்கிளைகள் நீண்டகாலமாக அகற்றப்படாமல் இருந்தன. இதன் காரணமாக, இரண்டு மின் வயர்களுக்கு இடையே மரக்கிளைகள் உராயும் போது மின் வெடிப்பு ஏற்பட்டு மின் சாரம் துண்டிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.

அதோடு, வீடுகளின் அருகில் உள்ள மரங்கள் மின் கம்பிகளில் உராய்வதால் அபாயகரமான சூழலில் வாழ்வதாகவும், அவற்றை மின் வாரியமோ அல்லது மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்களோ வெட்டி அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தவண்ணம் இருந்தன. இந்த சூழலில், கோவை மின் கோட்டம் சார்பில், மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் மின் வயர்கள் மீது உராயும் மரக்கிளைகளை வெட்டப்பட்டு மின் பாதைகள் இடையூறில்லாமல் இருக்கும் படி மேம்படுத்தப்படுகிறது.

எந்த இடத்தில் இப்பணிகள் நடைபெறுகின்றதோ அந்த பகுதிகளில் தற்காலிகமாக 1 முதல் 3 மணி நேரம் மின் தடை ஏற்படுத்தப்பட்டு, பணிகள் முடிக்கப்படுகின்றன. இதனால், அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதை தவிர்க்கலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Views: - 234

0

0