மழை நீர் சேகரிப்பு பள்ளத்தில் மண் சரிவு.. இரண்டு தொழிலாளிகள் மீட்பு : பெரும் போராட்டத்திற்கு பின் மற்றொருவர் மீட்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 August 2021, 5:58 pm
Rescue - Updatenews360
Quick Share

சென்னை : வண்ணாரப்பேட்டையில் மழைநீர் சேகரிப்பு குழியில் விழுந்த 3 பேரில் இருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஒருவரை பெரும் போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார்.

சென்னையில், வண்ணாரப்பேட்டையில் தாண்டவராயன் தெருவில் புதிதாக கண் மருத்துவமனை கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது .கட்டிடத்தின் பின்புறத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க குழி தோண்டும் பணியில் 5 பேர் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென்று மண் சரிந்ததில் விழுப்புரத்தை சேர்ந்த வீரப்பன், ஆகாஷ் மற்றும் சின்னத்துரை ஆகியோர் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஆகாஷையும், வீரப்பனையும் உயிருடன் மீட்டனர்.

வீரப்பன் மற்றும் ஆகாஷ் இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், சின்னத்துரையை மீட்கும் பணியில் கடந்த 2 மணி நேரமாக தொடர்ந்து ஈடுபட்டு வந்தது.

இந்த நிலையில் பெரும் போராட்டத்திற்கு பிறகு அவரை மீட்டுள்ளனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Views: - 212

1

0