உலக சுகாதார தினம் : கோவை அரசு கலைக்கல்லூரியில் நாப்கின் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2022, 4:43 pm
Napkin Rally -Updatenews360
Quick Share

கோவை : உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கோவை அரசு கலைக்கல்லூரி மாணவிகள் நாப்கின் குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் சுகாதாரத்தை பேணிக்காப்பது குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, கோவையில் அரசு கலை கல்லூரியில் “பெண்கள் நாட்டின் கண்கள் என்ற தலைப்பின்” கடந்த 6ம் தேதி முதல் வரும் 8ம் தேதி வரை விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது.


இதனிடையே சாதாரண எளிய குடும்பத்து மாணவிகளும் நாப்கின் பயன்படுத்தும் வகையில் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மாணவிகள் பேரணி நடத்தினர்.

கல்லூரி வளாகத்திற்குள் நடைபெற்ற இந்த பேரணியில் பல்வேறு துறைகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு நாப்கின் அணிதலின் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.

இந்த பேரணியில் கல்லூரி முதல்வர் கலைச்செல்வி, மென் திறன்கள் மேம்பாட்டு அலகின் ஒருங்கிணைப்பாளர் புஷ்பலதா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 309

0

0