உலக சாதனை முயற்சி : தலையில் கரகம் ஏந்தி பாட்டில் மீது ஏறி நின்ற மாணவி!!

1 November 2020, 10:43 am
World Record Attempt - Updatenews360
Quick Share

கோவை : கல்லூரி மாணவி, தலையில் கரகம் ஏந்திய படி தொடர்ந்து ஒரு மணி நேரம் மூன்று பாட்டில்கள் மீது கைகளில் தீச்சட்டியும் ஏந்தி நின்று உலக சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பேரூர் தமிழ் கல்லூரியில் தமிழ்துறையில் இளங்கலை பயின்று வரும் மாணவி ஐஸ்வர்யா. சின்னியம்பாளையம் குளத்தூர் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி, கவிதா ஆகியோரின் ஒரே மகளான இவர், சிறிய வயதில் இருந்தே நாட்டுப்புற கலைகள் மீதுள்ள ஆர்வத்தால் காந்திமாநகரில் உள்ள கிராமிய கலை கூடத்தில் கடந்த ஒரு வருடமாக கிராமிய கலைகளை கற்று வருகிறார்.

இந்நிலையில் இவருடன் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சக மாணவ,மாணவிகளின் சாதனை முயற்சியால் ஈர்க்ப்பட்ட இவர், தாமும் ஏதாவது சாதிக்க வேண்டும் எனும் முயற்சியில்,மாணவி ஐஸ்வர்யா பொன்னுசாமி, தலையில் கரகம் ஏந்தி படி தொடர்ந்து ஒரு மணி நேரம் மூன்று பாட்டில்கள் மீது கைகளில் தீச்சட்டியும் ஏந்தி நின்று உலக சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.

கிராமிய கலைகளில் தொடர்ந்து பல சாதனைகள் அரங்கேறிய நிலையில் கல்லூரி மாணவி ஐஸ்வர்யா மனதை ஒருமைபடுத்தி கைகள் மற்றும் தலையை அசைக்காமல் ஒரு மணி நேரம் பாட்டில்கள் மீது நின்று கண்களில் கண்ணீர் வழிய இவர் செய்த சாதனையை அங்கு கூடியிருந்த அனைவரும் கைகளை தட்டி ஊக்குவித்தனர்.

தொடர்ந்து சாதனை செய்த மாணவிக்கு நோபள் புக் ஆப் ரெக்கார்ட் சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,ஒரு வருடமாக கிராமிய கலைகளை கற்று வருவதாகவும், ஏதாவது ஒரு சாதனை செய்ய வேண்டும் எனும் இலட்சியத்தில் தாம் இந்த சாதனையை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Views: - 26

0

0