‘கரணம் தப்புனா மரணம்’…கண்களை கட்டி கொண்டு அசால்ட்டாக மலையேறிய மாணவிகள்: உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தல்..!!

Author: Rajesh
29 March 2022, 3:43 pm

கோவை: மலையேற்ற சாதனை நிகழ்வில் கண்களை கட்டி கொண்டு மலையேறி யுனிகா உலக சாதனையில் இடம்பிடித்த மாணவிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவையில், உலக மகளிர் தினம் மற்றும் உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மவுன்டனிரிங் அசோசியேஷன் மற்றும் கோவை CLIMB – ON Sport Climbing Centre இணைந்து மலையேற்ற சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில்,13 வயது மாணவியான சஹானா மற்றும் 11 வயது மாணவியான ஷருணிகா ஆகிய இரு மாணவிகள் 151 அடி உயர மலையை 11 நிமிடம் 28 வினாடிகளில் ஏறியும், கண்களை கட்டிக்கொண்டு 2 நிமிடம் 4 வினாடிகளில் இறங்கியும் உலக சாதனை படைத்துள்ளனர்.

முழுமையான தன்னம்பிக்கை மற்றும் மன மகிழ்வு, உடல் வலிமையுடனும் சாதனை நிகழ்த்திய மாணவிகளை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்..குறிப்பாக கடந்த 2020 ஆண்டு முதல் மலையேற்றம் போட்டி ஒலிம்பிக்கில் இணைந்துள்ள நிலையில் இந்த சாதனை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!