பாடியநல்லூர் முனீஸ்வரர் கோவில் தீமிதி திருவிழா: பால்வளத்துறை அமைச்சர் நாசர் சிறப்பு வழிபாடு..!!

Author: Rajesh
17 April 2022, 12:35 pm

திருவள்ளூர்: பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காளஈஸ்வரி ஆலயத்தில் அம்மனுக்கு தீபாராதனை செய்து வழிபாடு நடத்தி யானையிடம் ஆசி வாங்கனார் பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர்.

திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் அருள்மிகு முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி ஆலயத்தில் நாளை
தீமிதி திருவிழா நடைபெறுவதை ஒட்டி முளைப்பாரி வளர்த்து பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் ஆகியோர் கலந்து கொண்டு பழங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை தரிசனம் செய்தனர்.

அப்போது அமைச்சர் கோவில் வளாகத்தில் இருந்த ‌ அம்மனுக்கு அவரே‌ தீபாராதனை செய்து வழிபாடு நடத்தி யானையிடம் ஆசிவாங்கிய அவர் பின்னர் பக்தர்களுடன் சேர்ந்து உணவருந்தினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!