வெள்ளத்தில் மிதந்த ஏனாம் : 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்போடு வேறு இடத்திற்கு மாற்றம்!!

Author: Udayachandran
13 October 2020, 4:19 pm
Pondy Flood - Updatenews360
Quick Share

புதுச்சேரி : ஆந்திராவில் வீசிய புயல் காரணமாக ஏனாம் பிராந்தியத்தில் கனமழை பெயத்தால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.

ஆந்திராவில் வீசிய புயல் காரணமாக ஆந்திர கோதாவரி ஆற்று படுகையில் உள்ள புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.

அங்குள்ள காவல் நிலையம், வழிபாட்டு தளங்கள், பூங்கா, விளையாட்டு மைதானம், சாலைகள் என அனைத்து பகுதிகளும் மழை நீரால் நிரம்பியுள்ளன. தாழ்வான பகுதியில் வசித்து வந்த 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மட்டக்குரா என்ற பகுதியில் குடிசை வீடுகள் சரிந்து விழுந்துள்ளன. இதே போல் ஜூக்கிய நகர், அஞ்சம்காட்டா, State bank cornor போன்ற பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தகவல் அறிந்த சுகாதார துறை அமைச்சரும் தொகுதி எம்எல்ஏவுமான மல்லாடி கிருஷ்ணாராவ் ஏனாமில் உள்ள மண்டல அதிகாரியை தொடர்பு கொண்டு மழை வெள்ளத்தை அப்புறப்படுத்தவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகளை செய்து தரவும் அறிவுறுத்தியுள்ளார்.

Views: - 50

0

0