நீங்கள் பயாலஜிக்கலாக காணாமல் போகவில்லை… தேர்தல் ஆணையம் ரிப்ளைக்கு சு.வெங்கடேசன் கிண்டல்!

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2024, 5:06 pm

நாடாளு மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “காணாமல் போன தேர்தல் ஆணையர்கள்’ என சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பகிரப்படுவதை நாங்கள் பார்த்தோம். நாங்கள் எங்கும் காணாமல் போகவில்லை. இங்கேயேதான் இருக்கிறோம்.

இப்போது காணாமல் போன தேர்தல் ஆணையர்கள் மீண்டும் வந்துவிட்டார்கள் என்று மீம்ஸ் போடலாம் என்று கிண்டலாக பேசினார். தலைமை தேர்தல் ஆணையரின் இந்த பேச்சிற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

அதில், “நாங்கள் காணாமல் போகவில்லை, இங்கே தான் இருக்கிறோம்” என்று தேர்தல் ஆணையர்கள் இன்று சொல்லி உணர்த்தியதை இத்தனை நாட்களாக செயலின் மூலம் உணர்த்தியிருக்கலாம். “பயாலஜிக்கலாக” நீங்கள் காணாமல் போகவில்லை என்பது உண்மைதான்” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?