என் காரை நிறுத்தி நீங்கள் கேள்வி கேட்கலாம்.. உங்களுக்கு உரிமை இருக்கு : ராஜேந்திர பாலாஜி பேச்சு!
Author: Udayachandran RadhaKrishnan10 May 2025, 12:40 pm
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படியுங்க: மாயமான கணவர் புதைக்குழியில் இருந்து சடலமாக மீட்பு.. சிக்கிய திருநங்கை!
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் நிர்வாகிகள் முன்னிலையில் பேசியபோது, திமுக ஆட்சியின் மீது இன்று யாருக்கும் நம்பிக்கை இல்லை, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கலவரம், போதை புழக்கம் என்ற நிலையில்தான் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
அதிமுக ஆட்சியமைய பூத் கமிட்டியில் பணியாற்றும் படித்த இளைஞர்கள், படித்த இளம் பெண்களுக்கு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
அப்படி வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால் என் வீட்டிற்கு வந்து உரிமையோடு கேட்கலாம், எனது வண்டியை மறித்து கேட்கலாம் எனவும் கேட்கும் உரிமை உங்களுக்கு உள்ள நிலையில் அதை செய்யும் கடமை எங்களுக்கு உள்ளது என தெரிவித்தார்.
பூத் கமிட்டியில் நம்பிக்கையோடு களப்பணியாற்றுங்கள் உங்கள் குடும்பத்தின் ஒருவராகவும் மூத்த சகோதரராகவும் இருப்பேன் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.