புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்… அமைச்சர் கடும் விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan11 August 2025, 10:52 am
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் தமிழகம் முழுவதும் புதிய தாழ்தள பேருந்துகள் இயக்கத்தை தமிழக முதல்வர்துவக்கி வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மண்டலம் மூலம் திருச்சி மாநகரின் துவாக்குடி, கே.கே.நகர், ஸ்ரீரங்கம், விமான நிலையம் உள்ளிட்ட வழித்தடங்களில் 3புதிய தாழ்தள சொகுசு பேருந்து சேவையினை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் திருச்சி மாநகர செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான மதிவாணன் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தொழிலாளர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்கள் சிபிஎஸ்சி 9வது வகுப்பிற்கு புத்தகத்தைப் பார்த்து பரீட்சை எழுதலாம் என்று கூறப்பட்டிருக்கிறதே என்ற கேள்விக்கு அறிவு வளருமா என்று பதில் அளித்துவிட்டு கடந்து சென்றார்.
