இஸ்திரி பெட்டிகளுக்கு இனி ரெஸ்ட்.. இனி துணிகளை நீங்க அயர்ன் பண்ண வேண்டாம்.. வந்தாச்சு புதிய இயந்திரம்!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2024, 3:57 pm

மரக்கட்டை கரி இஸ்திரி பெட்டிக்கு இனி ரெஸ்ட், மாற்றாக வந்த நவீன இயந்திரம் பெஸ்ட் நீராவி, வெப்பக்காற்று மூலமாக உடை இஸ்திரி செய்யும் வசதிகள்.

சட்டை, பேண்ட், டி சர்ட், சேலை, வேட்டி போன்ற உடைகளை ஒரே மெசினில் இஸ்திரி போடும் வசதி. பழைய உடைகளை புதிய உடைகளாகவும், உடைகள் சுருக்கமின்றி மிடுக்காக இருக்க இஸ்திரி செய்வதும், இயல்பாக நடந்துவரும் விடயமே.

பொதுவாக இஸ்திரி போடுவதற்கென, எரியூட்டப்பட்ட மரக்கட்டைகளின் கரியை தீயிட்டு , இஸ்திரி பெட்டிக்குள் அடைத்து, அதில் வெளிப்படுகின்ற வெப்பத்தில் உடுப்புகள் இஸ்திரி செய்யப்படுகின்றன.

இதில் வீட்டிலேயே இஸ்திரி செய்யும் வகையில், எலக்ட்ரிக் அயர்ன் பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர் . இந்த நிலையிலே, நவீன தொழில்நுட்பம் உலகின் பல்வேறு துறைகளை ஆட்கொண்டு வரும் நிலையில், அயர்னிங் செய்யும் தொழிலையும் விட்டு வைக்காமல், அயர்னிங் தொழிலுக்கும் முன்னேற்றத்திற்கு வித்திட்டு இருக்கின்றன.

பொதுவாக துணிகளுக்கு தண்ணீர் தெளித்து, அதில் வெப்பமான இஸ்திரி பெட்டியை வைத்து, உடுப்புகள் தேய்த்து மடித்து மனிதர்கள் செய்யும் வேலையை, ஒரு நவீன இயந்திரம் தாமாக செய்கின்றது.

நீராவி வெப்பத்திலும், வெப்ப காற்றிலும் ஆடைகளை அயர்ன் செய்து, அயர்ன் செய்யப்பட்ட் அடைகளை தாமாக மடித்து தருகின்ற வகையிலே, “ஆட்டோமேட்டிக் அயர்னிங் அண்ட் ஃபோல்டிங் மிஷின்” கோவையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

உடல் உபாதைகளை நீக்குபவர்கள் மருத்துவர்கள் என்ற அடிப்படையில், இஸ்திரி தொழிலின் இடர்பாடுகளுக்கு தீர்வாக இந்த இயந்திரம் என்ற அடிப்படையில், டாக்டர் ஃபேப்ரிக் ஆட்டோமேச்டிக் அயர்னிங் அண்ட் ஃபோல்டிங் மெசின் என்று மெசினுக்கு பெயர் சூட்டியிருகின்றனர் .

நவீன இஸ்திரி இயந்திரத்தில், அனைத்து விதமான ஆடைகளையும் இஸ்திரி செய்யும் வகையில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மெஷின் ப்ரோக்ராமிங் செய்யப்பட்டிருக்கின்றன .

ஆடைகளின் தன்மைக்கு ஏற்ற வகையில் வெப்ப அளவை மாற்றி, வெப்பக் காற்று மற்றும் நீராவி வெப்பத்தினாலெ உள்ளிட்ட இரண்டு விதமான முறைகளில் அயர்னிங் செய்து தருகின்றனர். அயர்னிங் செய்யப்பட்ட ஆடைகள் ஆட்டோ போல்டிங் மிசினால் தாமாக மடித்து தரப்படுகின்றன.

சட்டை , பேண்ட் , டீ சர்ட் , வேட்டி சேலை உள்ளிட்ட அனைத்து உடைகளும் இதில் அயர்ன் செய்யப்படுகின்றன.

பொதுவாக மனிதர்களால் இஸ்திரி செய்யப்படும் மெஷின்களில், ஒரு மணி நேரத்திற்கு 20 ஆடைகள் இஸ்திரி செய்யப்படுகிறது என்றால் , இந்த மெஷினில் 60 ஆடைகள் வரை அயர்னிங் செய்து கொள்ளும் வகையில் டெக்னாலஜிடன் மெசினை தயாரித்திருக்கின்றனர்.

மேலும் படிக்க: நண்பனின் மகன்களை கொடூரமாக கொலை செய்த நபர்.. நெஞ்சை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!

இந்த நவீன இயந்திரத்தில் நீராவிக்காக தண்ணீர் ஊற்றும் புனலும் அமைக்கப்பட்டிருக்கின்றன. மின்சாரத்தால் இந்த மெஷின் இயங்கப்படுவதனால், கரி பயன்படுத்துவதால் ஏற்படும் புகை தடுக்கின்றனர். பொன்னான நேரத்தை விரயவாக்கும் நிலையை தடுக்கின்றனர் .

மரங்கள் வெட்டப்படுவது தடுக்கின்றனர். உலகம் ஓடும் வேகத்துக்கு ஏற்றவாறு விரைந்து உடைகளை அயன் செய்யும் வகையில், இந்த மிஷின் வடிவமைப்பு தரப்பட்டிருக்கின்றன.

அயனிங் செய்வதற்கு பல்வேறு மெஷின்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், ஆட்டோமேட்டிக் அயர்னிங் மற்றும் ஃபோல்டிங் என்ற அமைப்புடன் முதன்முறையாக மெஷினை, ஒன்றை வருட உழைப்பை செலவழித்து தயாரித்து இருப்பதாக தெரிவித்த தயாரிப்பாளர், காப்புரிமைக்காக கம்பெனியில் இருந்து விண்ணப்பித்திருப்பதாக தெரிவித்து இருக்கின்றார்.

நவீன அறிவியல் உலகில் உடல் உழைப்பை செலுத்தும் பல்வேறு தொழில்களுக்கு ஆள் பற்றாக்குறை இருக்கும் நிலையிலே, மனித உடல் உழைப்புக்கு மாற்றாக பல்வேறு நவீன இயந்திரங்கள் வந்து வரும் நிலையில், நாள் முழுக்க கால்கடுக்க நின்று, கரி நெருப்பில் இஸ்திரி போடும் அண்ணன்களுக்கு , இனி கவலை வேண்டாம் என்ற அடிப்படையில், டாக்டர் பேப்ரிக் என்ற நவீன அயர்னிங் அண்ட் ஃபோல்டிங் மிஷின் வந்திருப்பது வரவேற்கும் வகையில் அமைந்திருக்கின்றன.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!