கஞ்சாவுக்காக காதலையும் உயிரையும் இழந்த வாலிபர் : முன்னாள் காதலியின் கணவர் செய்த வெறிச்செயல்!!

8 February 2021, 2:15 pm
Cbe Murder - Updatenews360
Quick Share

கோவை : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் . 23 வயதான இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது பல்வேறு கஞ்சா வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி இரவு 11 மணியளவில் மணிகண்டன் வீட்டிற்கு சென்ற 4 பேர் தங்களை காவல்துறையினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். பின்னர் கஞ்சா வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என கூறி மணிகண்டனை அழைத்து சென்றனர்.

இதையடுத்து மறுநாள் 26ம் தேதி காலை மணிகண்டனின் பெற்றோர் துடியலூர் காவல் நிலையம் சென்ற போது , விசாரணைக்கு தாங்கள் யாரையும் அழைத்து வரவில்லை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 26ஆம் தேதி மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோவில் பகுதியில் பலத்த காயங்களுடன் மணிகண்டன் கிடந்துள்ளார். அவரை மீட்ட மேட்டுப்பாளையம் போலீசார் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு மாற்றப்பட்ட மணிகண்டன் கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் இது தொடர்பாக மேட்டுப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீஸ் விசாரணையில் கஞ்சா வியாபாரியான மணிகண்டன் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததும் , கஞ்சா வழக்கு தொடர்பாக சிறைக்கு சென்ற போது அந்த பெண்ணுக்கு சுரேஷ் என்ற நபருடன் திருமணம் நடைபெற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் சிறையில் இருந்து வெளியில் வந்த மணிகண்டன், தனது காதலியின் கணவர் சுரேசை மிரட்டி தாக்கியுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு சென்ற மணிகண்டனை சுரேஷின் நண்பர்கள் தான் போலீஸ் என்றும், கஞ்சா கடத்தல் குறித்து விசாரிக்க வேண்டும் என மணிகண்டனை அழைத்துள்ளனர்.

இதையடுத்து சுரேஷ் தனது நண்பர்கள் சுஜித் மற்றும் சிலருடன் இணைந்து மணிகண்டனை காரில் மேட்டுப்பாளையத்திற்கு கடத்திச் சென்று, வனப்பகுதியில் வைத்து தாக்கியுள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

அந்த வீடியோ காட்சிகளில் மணிகண்டன் கதறுவதும் ,அவரை சுரேஷ் மற்றும் அவரின் நண்பர்கள் சிலர் தாக்குவதும் பதிவாகி உள்ளது. ரத்த காயத்துடன் இருக்கும் மணிகண்டனை ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்தும், காலில் விழச் சொல்வதும் பதிவாகி இருக்கின்றது. இந்த வீடியோ காட்சிகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0