‘எனக்கு சரக்கு தர மாட்டீங்களா?’…ஆத்திரத்தில் காரை ஏற்றி கேட்டை உடைத்த மைனர்: பைவ் ஸ்டார் ஹோட்டலில் பரபரப்பு..!!

Author: Rajesh
4 April 2022, 6:10 pm
Quick Share

சென்னை: கிண்டியில் நட்சத்திர ஹோட்டலில் மது அருந்த அனுமதிக்காததால் விடுதியில் கேட் மீது காரை ஏற்றி இளைஞர் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டி கத்திப்பாராவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு காரில் வந்த இளைஞர் ஒருவர் அந்த ஹோட்டலில் உள்ள மதுபான விடுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த இளைஞரின் வயது குறித்து அறிந்த ஊழியர், அந்த இளைஞருக்கு வயது குறைவாக இருப்பதால் மது அருந்த அனுமதிக்க முடியாது என கூறி அந்த இளைஞரை திருப்பி அனுப்பியுள்ளனர்.

Chennai car issue

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் பார் உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். உடனே அந்த இளைஞர் கூச்சலிட்டு ஹோட்டல் ஊழியர்களுடனுடத வாக்குவாதம் செய்துள்ளார். இருப்பினும் ஊழியர்கள் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது என கூறிவிட்டனர்.

ஹோட்டலில் இருந்து வெளியேறி பார்க்கிங்கில் இருந்த தனது காரில் ஏறிய இளைஞர் காரை வேகமாக எடுத்து கொண்டு வெளியே வந்தார். பின்னர் அங்கிருந்து தனது காரை எடுத்து வந்து அதிவேகத்தில் ஓட்டலின் இரும்பு கேட்டின் மீது மோதினார். இதனால் அங்கு பணியிலிருந்த பாதுகாப்பு ஊழியர்கள் சிதறி ஓடியிருக்கின்றனர்.

இதில் அவரது காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்ததோடு, அந்த இரும்பு கேட்டில் அவரது காரில் சிக்கிக் கொண்டது. இதனால் அந்த இளைஞரால் அங்கிருந்து தப்பிச்செல்ல முடியவில்லை. மேலும் இரும்பு கேட் மாட்டிக்கொண்ட கார் நடு ரோட்டில் நின்றது. சென்னையின் பிரதான பகுதியான கிண்டியின் மையப்பகுதியில் இந்த விபத்து நடந்ததால் சென்னையிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் நோக்கி வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

chennai car issue

இது பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது காரில் காயம் அடைந்து இருந்த சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இரும்பு கேட்டுடன் இருந்த காரை பொக்லைன் உதவியுடன் போலீசார் அகற்றினார். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த இளைஞர் வந்திருந்த காரில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததால், அந்த இளைஞரின் குடும்பத்தினர் காவல்துறையின் உள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 326

0

0