பெண் பொறியாளரை காதலித்து கர்ப்பமாக்கிய இளைஞர் : பச்சிளம் குழந்தையுடன் பொறியாளர் போராட்டம்!!

4 November 2020, 4:14 pm
Love Cheat - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : திருமணம் செய்வதாக கூறி பெண் பொறியாளரை காதலித்து திருமணம் செய்த கப்பமாக்கிய வாலிபர் தலைமறைவானதால், பச்சிளம் குழந்தையுடன் பெண் கணவர் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே திருமணம் செய்வதாக கூறி பொறியாளரை கர்ப்பமாக்கிய இளைஞன் குடும்பத்தினரின் நெருக்கடியால் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டாலும் தற்போது அவர் தலைமறைவான நிலையில், பச்சிளம் குழந்தையோடு கணவனின் வீட்டு முன் அமர்ந்து போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே திருவிதாங்கோடு அண்ணாநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் சந்தியா. பி.இ எலக்ட்ராணிக்ஸ் என்ஜினீயரான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அழகியமண்டபம் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த உறவினரான ரஜீஷ் என்ற டெம்போ ஓட்டுனரை காதலித்தார்.

காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தன் பலனாக கடந்த ஓராண்டுக்கு முன்பு சந்தியா கர்ப்பமானார். இதுகுறித்து காதலன் ரஜீ ஷிடம் தெரிவித்ததிலிருந்து ரஜீஷ் இவரிடமிருந்து இடைவெளி விட துவங்கினார்.

இதனால் உஷாரான சந்தியா பெற்றோரிடம் தனது நிலைமையை எடுத்துரைத்தது ரஜீஷ் தன்னிடமிருந்து நழுவ முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்தியாவின் பெற்றோர் ரஜீஷ் பெற்றோர்களிடம் பேசி இருவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்தனர்.

ரஜீஸ் வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்கவே பெண் வீட்டாரின் வேண்டுதலுக்கு ஒத்துழைத்த ரஜீஷ் வீட்டை விட்டு வெளியேறி சந்தியாவின் வீட்டருகே உள்ள கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதோடு அரசு விதிமுறைப்படி பதிவும் செய்து கொண்டனர்.

அதன் பின்னர் ரஜீஷ் சந்தியாவை சந்திப்பதை தவிர்த்து விட்டு கேரளாவிற்கு வேலைக்கு சென்றான். திருமணம் செய்து கொண்ட பின்னரும் தன்னை கைகழுவ முயற்சிக்கும் ரஜீஷ் திட்டத்தை புரிந்து கொண்ட சந்தியா ரஜீஷை தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார்.

எனினும் அவரோடு சேர்ந்து வாழ தயாரில்லாத ரஜீஷ் சந்தியாவை பார்ப்பதையே தவிர்த்து வெளியிலேயே தங்கிவிட்டார். இதற்கிடையே குழந்தை பிறந்த நிலையில் தனது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதை புரிந்து கொண்ட சந்தியா ரஜீஷடன் சேர்ந்து வாழ காவல்துறையின் உதவியை நாடினார்.
தக்கலை காவல் நிலையம் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என ஒவ்வொரு அலுவலக வாயில்களிலும் நடக்க துவங்கினார். இதனால் ரஜீஷ்க்கு நெருக்கடி அதிகரிக்கவே என்ன ஆனாலும் சந்தியாவோடு சேர்ந்து வாழ தயார் இல்லை என்பதில் உறுதியாக இருந்து சந்தியாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதோடு வீட்டாரின் விருப்பத்திற்கு இணங்க வேறு திருமண ஏற்பாடுகளையும் செய்து வருவதாக தெரிகிறது.

அதை ஏற்க மறுத்த சந்தியா தற்போது ரஜீஷ்ஷின் வீட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் தற்போது ரஜீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த வீட்டில் இருந்து மாயமாகி உள்ள நிலையில் ரஜீஷைஐ மீட்டு தன்னோடு சேர்த்து வைக்குமாறு காவல்துறையை வலியுறுத்தி சந்தியா தனது பச்சிளம் குழந்தையுடன் அந்த வீட்டில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

Views: - 18

0

0