இளம் வாக்காளர்களின் ஓட்டு அதிமுகவுக்குத்தான் : வாக்களித்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி நம்பிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2024, 1:27 pm

இளம் வாக்காளர்களின் ஓட்டு அதிமுகவுக்குத்தான் : வாக்களித்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி நம்பிக்கை!

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தனது மனைவி வித்யா மற்றும் மகன் விகாஸ் உடன் நடந்து சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,அதிமுக இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என்றும் மக்கள் மாற்றம் வேண்டும் என்று விரும்பும் நிலையில் கோவை,பொள்ளாச்சி, திருப்பூர்,ஈரோடு,நீலகிரி உட்பட அனைத்து தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் பாஜக மற்றும் திமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் ஜனநாயக முறைப்படி நேர்மையாக தாங்கள் இந்த தேர்தலை எதிர்கொள்ள விரும்புவதாகவும் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி துறையில் மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில்தான் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டதாகவும் மருத்துவக் கல்வியில் 7. 5% இட ஒதுக்கீடு வழங்கியது உள்ளிட்ட திட்டங்களால் இளம் வாக்காளர்கள் அதிமுகவிற்கே வாக்களிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…