இளம்பெண்ணின் இருசக்கர வாகனம் அபேஸ்… அலட்சியத்தை சாதகமாக்கிய திருடன்..ஷாக் காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2024, 5:33 pm

இளம்பெண்ணின் இருசக்கர வாகனம் அபேஸ்… அலட்சியத்தை சாதகமாக்கிய திருடன்..ஷாக் காட்சி!

சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே வசிப்பவர் நந்தினி. இவர் பேருந்து நிலையம் அருகே வங்கியில் பணம் எடுப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வந்தவர்.

ஞாபக மறதியாக வண்டியில் சாவியை விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனை அப்பகுதியில் நோட்டமிட்ட இளைஞர் ஒருவர் நந்தினி வங்கிக்குள் சென்றவுடன் லாபகமாக சாவியை ஆன் செய்து வண்டியை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து கடந்து சென்றார்.

பின்னர் பணம் எடுத்துக் கொண்டு வெளியில் வந்த நந்தினி வண்டியில்லாத கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் திருட்டு சம்பவம் குறித்து சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த நிலையில் போலீசார் சிசிடிவி காட்சியை கொண்டு குற்றவாளியை தேடி வருகின்றனர்.

  • santhosh narayanan shared the comic incident viral on internet சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?