நேரம் கிடைக்கும் போதெல்லாம் நெருக்கம்.. 16 வயது சிறுமியை 5 மாத கர்ப்பம் ஆக்கிய இளைஞர்..!

Author: Vignesh
21 June 2024, 11:27 am
Quick Share

ஆலங்குடி அருகே 11-ம் வகுப்பு மாணவியை 5 மாத கர்ப்பம் ஆக்கிய 21 வயது இளைஞரை கைது செய்து ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா திருமணஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் 16 வயதான பள்ளி மாணவி. இவர் அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு அருகில் நடந்த திருவிழாவிற்கு சென்றபோது அவருக்கும் கறம்பக்குடி தாலுகா நெய்வேலி பகுதியைச் சேர்ந்த 21 வயதான சிவா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில், சிவா பதினோராம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி மூன்றுக்கும் மேற்பட்ட முறைகள் அவருடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவியின் வயிறு பெரிதாகவும் மிகவும் சோர்வாகவும் காணப்பட்டதால் இதுகுறித்து மாணவியின் தாயார் மாணவியுடன் விசாரித்ததில் இந்த உண்மைகள் தெரியவந்துள்ளது உடனடியாக மாணவியை புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

5 மாதம் கர்ப்பமாக உள்ள மாணவியின் விவரம் குறித்து மருத்துவர்கள் கூறிய அறிவுரையின்படி மாணவியின் தாயார் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளைஞர் சிவா மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த சிவாவை(21) கைது செய்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்தி புதுக்கோட்டை கிளைச் சிறையில் அவரை அடைத்தனர்.

Views: - 121

0

0