பரோட்டாவுக்கு கூடுதலாக சால்னா கேட்டது குத்தமா..? கரண்டியால் தாக்கி வாலிபர் பல் உடைப்பு ; உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
7 April 2023, 10:29 am

சேலம் ; பரோட்டாவிற்கு கூடுதலாக சால்னா கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டாததால், வாலிபர் பல் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் முகமது புறா பகுதியில் செஷிப் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் என்பவர் நேற்று உணவகத்திற்கு சென்று பத்து பரோட்டா வாங்கி உள்ளார். அப்போது, கூடுதலாக சால்னா கேட்டதற்கு கடையின் உரிமையாளர் முகமது அலி உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து ஷாஜகானுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, திடீரென பரோட்டா எடுக்கும் கரண்டியால் ஷாஜகானின் முகத்தில் குத்தியுள்ளனர். இதில் முன் பகுதியில் இருந்த இரண்டு பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது. இதனை அடுத்து ஷாஜகானை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்தனர்.

காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், திமுக முன்னாள் கவுன்சிலர் கபீர் ஆதரவால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தி வருவதாக பாதிக்கப்பட்டவர்களின் தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தினர்.

காவல்துறையின் பேச்சு வார்த்தைக்கு உடன்படாத உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது:- பரோட்டாவிற்கு கூடுதலாக குருமா கேட்ட குற்றத்திற்காக முகமது பாருக், சுல்தான், உள்ளிட்டோர் ஷாஜகானை தாக்கியுள்ளனர். நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறை கேட்டதற்கு திமுகவின் தலையீடு இருப்பதால் அவர்கள் மெத்தனம் காட்டுகின்றனர். இதுவரை எந்தவித நடவடிக்கும் எடுக்கப்படாததால், தற்போது ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளோம். உடனடியாக நடவடிக்கை எடுத்து தாக்குதல் நடத்திய வரை கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்,என தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!