ஆன்லைன் ரம்மியால் பெருகிய கடன் தொல்லை..! வாலிபர் தீக்குளித்து தற்கொலை!!!

18 October 2020, 6:07 pm
Quick Share

புதுச்சேரி: ஆன்லைன் ரம்மி விலையாட்டிற்காக கடன் வாங்கி அதை திரும்ப தர இயலாத காரணத்தினால் வாலிபர் ஒருவர் உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது

புதுச்சேரி கோர்க்காடு ஏரிகரையோரம் இன்று பாதி எறிந்த நிலையில் வாலிபர் ஒருவரின் உடல் இருந்துள்ளது. அப்போது அவ்வழியே விவசாய நிலத்திற்கு பணிக்கு சென்று கொண்டிருந்தவர்கள் உடலை பார்த்து மங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உடல் எறிந்த நிலையில் இருந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கோர்காடு கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார், திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள இவர் அதே பகுதியில் சிம் கார்ட் மற்றும் ரீ சார்ஜ் கடை நடத்தி வருபவர் என்றும்,

இவர் சில மாதங்களாக தன் செல்போன் மூலம் ஆன்லைன் ரம்மி எனப்படும் சீட்டு கட்டு விளையாட்டை விளையாடி அதற்காக அதிக அளவில் கடன் வாங்கி பந்தயம் வைத்து விளையாடியதில் பெரும் நஷ்டம் ஏற்ப்பட்டதால், பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்கும் போது அதனை திருப்பி தர முடியததால், பெரும் மன உளைச்சலுக்கு ஆளான இவர் நேற்று இரவு கோர்க்காடு நத்தமேடு ஏரிக்கரை பகுதியில் தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலிசார் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் ஆன்லைன் ரம்மி விலையாட்டால் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.