ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை : விருதுநகர் அருகே சோகம்!!
5 February 2021, 2:41 pmவிருதுநகர் : சாத்தூர் அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு முரளிதரன் (வயது 22) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் திருமணமாகி கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சீனிவாசன் மகன் முரளிதரனுக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கேட்டரிங் படித்து உள்ளார். கேட்டரிங் வேலை கிடைக்காத காரணத்தால் கடந்த ஒரு வருடமாக சாத்தூரில் உள்ள TVLS லாரி நிறுவனத்தில் கிளீனிராக பணிபுரிந்து வந்துள்ளார் முரளிதரன்.
முரளிதரனுக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்துள்ளது. வயிற்று வலிக்கு சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வயிற்று வலி அதிகாரித்துள்ளது.
இதனால் நேற்று மாலை லாரி ஷெட்டுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி விட்டு சாத்தூர் வந்த முரளிதரன் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழ்ந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் முரளிதரன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து வழக்குபதிவு செய்து தாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆகாத வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒ.மேட்டுபட்டி கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
0
0