ஜிம்மில் இருந்து இளைஞர் சடலம் மீட்பு… போலீசார் விசாரணையில் பகீர் தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2024, 4:37 pm

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் பகுதியைசேர்ந்தவர் இளைஞர் வினோத் 35. இவர் தேசிய அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்

இதையும் படியுங்க: திமுக ஞாபகம் வைக்க இதுபோதும்.. அண்ணாமலை கடும் தாக்கு!

இந்த நிலையில் அத்திப்பட்டு பகுதியில் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து விட்டு வந்தபோது அங்கு அவருக்கு உடனடியாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு அருகில் உள்ள அத்திப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Youth Dead in Gym

மாரடைப்பு காரணமாக இளைஞர் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்து மீஞ்சூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!