‘எங்க வீட்டுப் பெண்ணையா லவ் பண்ற‘ : நடுரோட்டில் இளைஞர் வெட்டிப் படுகொலை!! (வீடியோ)

7 January 2021, 3:47 pm
Youth Murder -Updatenews360
Quick Share

கரூர் : காதல் விவகாரத்தில் நேற்று 23 வயதான சலூன் கடைக்காரரை கொலை செய்த சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், பெண் வீட்டாருக்கு சொந்தமான கடையை அடித்து நொறுக்கி மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

கரூர் காமராஜர் நகரைச் சேர்ந்த ஹரிஹரன் (வயது 23). இவர் அதே பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த வேலன் (வயது 49) என்பவரின் 18 வயது மகளுடன் காதல் ஏற்பட்டது.

கல்லூரி மாணவியான அவரும், சலூன் காடைக்காரரான ஹரிஹரனை காதலித்தார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்ததாக தெரிய வருகிறது. இந்த நிலையில் இளம் பெண்ணின் பெற்றோர்கள் காதலை கைவிடும்படி கோரியுள்ளனர்.

பெற்றோரின் பேச்சைக் கேட்டு அந்தப் பெண் காதலனுடன் கடந்த இரண்டு மாதமாக தொடர்பில் இல்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் ஹரிஹரன் காதலியை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். இதை அந்தப் பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்டித்துள்ளனர்.

நேற்று கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு பைக்கில் வந்த ஹரிஹரனை வழிமறித்து 5 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்தனர். இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பெண்ணின் பெரியப்பா சங்கர் (வயது 50) தாய்மாமன்கள் கார்த்திகேயன் (வயது 40) வெள்ளைச்சாமி (வயது 38) ஆகிய மூன்று பேரை கரூர் நகர போலீசார் கைது செய்தனர். மேலும் பெண்ணின் தந்தை வேலன் (வயது 49) சித்தப்பா (முத்து 47) ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான பழைய இரும்பு கடையை உடைத்த மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். சம்பவ இடத்தில் கரூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கொலைக்கு காரணமான பெண்ணை கைது செய்ய வலியுறுத்தி ஹரிஹரனின் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 60

0

0