இறுதி சடங்குக்கு சென்ற இளைஞருக்கு இறுதி ஊர்வலம்!!

3 September 2020, 10:10 am
Youth Murder - Updatenews360
Quick Share

திருப்பூர் : இறந்தவர் உடலுக்கு மலர்வளையம் வைப்பதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் கொலை சய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் – புதுக்காடு பகுதியில், நடந்த துக்க நிகழ்ச்சி ஒன்றில், கார்த்திக்ராஜா (வயது 25) என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அந்த துக்க நிகழ்ச்சியில் அழகுராஜா மற்றும் அவரது நண்பர்களும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இறந்தவரின் உடலுக்கு மலர்வளையம் வைப்பதில் இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் காயமடைந்த அழகுராஜா அளித்த புகாரின் பேரில், கார்த்திக்ராஜா மற்றும் அவரது நண்பர்கள் மீது திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் பல்லடத்திலுள்ள மாமியார் வீட்டுக்கு சென்ற கார்த்திக்ராஜா, படுத்து தூங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். பரிசோதனையில் கார்த்திக்ராஜாவின் உச்சந்தலையில் பலத்த காயம் இருந்ததாகவும், சிகிச்சை எடுக்காத காரணத்தால் தலைக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கொலை வழக்குப்பதிவு செய்த திருப்பூர் தெற்கு போலீசார் அழகுராஜா, சக்திவேல், சல்மான்கான் ஆகியோரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்ற இளைஞருக்கு இறுதிச்சடங்கு செய்த கொடுமை திருப்பூர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 0

0

0