பட்டப்பகலில் நடுரோட்டில் இளைஞர் வெட்டிக்கொலை..!! காப்பாற்றாமல் வீடியோ எடுத்த கொடூரம்..!!…

25 November 2020, 8:19 pm
Quick Share

சேலம்: முன்விரோதம் காரணமாக வாலிபர் சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் கீழக்கரை பகுதியை சேர்ந்த எடிசன் என்பவர் ஆகஸ்ட் 7ஆம் தேதி கஞ்சா விற்பனை செய்ததில் ஏற்பட்ட தகராறில் கோபிநாத் அவரது நண்பருடன் சேர்ந்து கொலை செய்தார். இந்த வழக்கில் கீழக்கரை காவல்துறையினர் இருவரையும் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். இதனையடுத்து நிபந்தனை ஜாமினில் வெளிவந்த கோபிநாத் மற்றும் அவரது நண்பர் தேவகுமார் சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகி 15 நாட்களுக்கு கையெழுத்திட ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் கோபிநாத் மற்றும் தேவகுமார் ஆகிய இருவரும் சேலம் சூரமங்கலம் காவல் நிலையம் அருகே வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியே வந்த கோபிநாத்தை 3 பேர் கொண்ட கும்பல் சாலையில் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. கோபிநாத் நண்பர் தேவகுமார் தப்பி காவல் நிலையத்திற்குள் சென்றதால் உயிர் தப்பினார்.

இந்த நிலையில் கோபிநாத்தை கொலை செய்த அந்தோணி, கார்த்தி மற்றும் பிரகாஷ் ஆகிய மூன்று நபர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த நிலையில் இந்த கொடூர படுகொலையின் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. பட்டப்பகலில் காவல் நிலையம் எதிரே காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த நபர்களை சரமாரியாக வெட்டிய காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது குறிப்பிடதக்கது.

Views: - 19

0

0