அதிமுக ஆட்சி அமைய அணில் போல இளைஞர்கள் உதவ வேண்டும்.. முன்னாள் அமைச்சர் கலகல..!!

Author: Udayachandran RadhaKrishnan
22 September 2025, 11:36 am

2026 தேர்தல் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தற்சமயம் பத்திரிக்கையும் ஊடகங்களும் விலை போய் உள்ளது.இந்த கட்சியில் மூன்றாம் தலைமுறை வருகை தந்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

எந்த கூட்டத்தையும் பார்த்து பயப்பட வேண்டாம். எம் ஜி ஆர் கூட்டத்தை எவனாலும் வெல்ல முடியாது.நாம்தான் அடுத்த வெல்ல போவது நமது கட்சி எழுச்சியோடு உள்ளது

கடந்த 52 மாதங்களில் திமுக அரசு எதையும் செய்யவில்லை விளம்பரம் மட்டுமே செய்துள்ளது. நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் போட்டு வருகிறார்கள். வாயில் நுழையாத பலதிட்டங்கள் உள்ளது ஆனால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை விலைவாசி அளவுக்கு அதிகமாக உள்ளது.

பல்வேறு துறைகளில் பல கோடிகள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. நாம் வளர்க்கும் நாய்க்கும் வரி போட்டார்கள் எதிர்ப்பு வந்தவுடன் தான் நிறுத்தினார்கள்.

சதுரங்க வேட்டை திரைப்படம் போல மக்களின் ஆசையை தூண்டி தூண்டி விடுகிறார்கள். ஆனால் திமுகவிற்கு எந்த விதத்திலும் மக்கள் வாக்கு. அளிக்க மாட்டார்கள்.

திமுகவின் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் கொள்கைகளை அடமானம் வைத்து விட்டார்கள்.கூட்டணி கட்சிகள் எல்லாம் ஆட்டமாய் ஆடி வருகிறார்கள்

தமிழக வெற்றி கழகத்திற்கு வரக்கூடிய கூட்டம் எல்லாம் அவருடைய ரசிகர்கள் மட்டுமே வருகிறார்கள் ஆனால் உறுப்பினர்களாக வரவில்லை அந்தக் கூட்டத்தில் கட்டுக்கோப்பும் இல்லை.

இது என்ன எழுச்சி ? எம்ஜிஆர் வருகை தந்த பொழுது தமிழ்நாடு கொந்தளித்தது.இந்தக் கூட்டத்தை வைத்து நான் முதலமைச்சராக வந்து விடுவேன் என்று சொன்னால் அதெல்லாம் முடியுமா முடியவே முடியாது நமது தலைவன் எம்ஜிஆர் மாதிரி ஒருவன் பிறக்கவே முடியாது.

எம்ஜிஆரின் சாணக்கிய தனம் விஜயிடம் கிடையவே கிடையாது.பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தார்கள் அவர்களுக்கெல்லாம் கூடாத கூட்டமா டி ராஜேந்தர். பாக்கியராஜ் உள்ளிட்டோரெல்லாம் வந்தார்கள் அப்பொழுதும் கூட்டம் வந்தது

நாமும் குள்ளமணி உள்ளிட்ட பல்வேறு நடிகர்களை வைத்து பிரச்சாரம் செய்தோம் ஆனால் அப்பொழுது ஓட்டு போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தவக்களை என்கிற குள்ளமணி வராத இடத்தில் 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் நாம் லீடிங்கில் இருந்தோம்.

சிலருக்கு கூடுகிற கூட்டத்தை வைத்து நாம் ஏமாந்து விடக்கூடாது. ராமர் பாலத்தை கட்டியது அணில்.அதுபோல நமது ஆட்சி அமைய நீங்கள் உதவ வேண்டும் என்றவுடன் நீங்கள் வேற அணிலை நினைத்து விடாதீர்கள் என சிரிப்பலையோடு நிறைவு செய்தார்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!