யானையை துரத்திய இளைஞர்கள் : வீடியோவால் கைது!!

13 September 2020, 3:01 pm
Elephant - Updatenews360
Quick Share

நீலகிரி : முதுமலை வனப்பகுதி சீகூர் பாலம் அருகே இரவில் சாலையில் சென்ற யானையை வாகனத்தில் துரத்தி கோபத்தை ஏற்படுத்தி அத்துமீறிய வாகன ஓட்டியை எச்சரித்த வனத்துறையினர் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள், புலிகள், சிறுத்தை, காட்டெருமை, மான் உட்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வன விலங்குகள் மனிதர்களை தாக்காமல் இருப்பதற்க்கும் வன விலங்குகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முதுமலை வனப் பகுதி நடுவே வாகனத்தை நிறுத்தவோ சாலை ஓரங்களில் வன விலங்குகள் நடமாடும் பட்சத்தில் அவைகளிடம் அத்துமீறும் வர்கள் மீது வனத்துரையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சிங்காரா வனசரகத்திற்குட்பட்ட சீகூர் பாலம் அருகே இரவில் உதகையை சேர்ந்த சுஜீன் மற்றும் அவரது நண்பர் மசினகுடியில் இருந்து உதகை சென்றுள்ளனர். அப்போது சீகூர் பாலம் அருகே சாலையில் சென்ற ஒற்றை யானையை வழி மறித்து அதனை கோபம் அடையும் வகையில் வாகனத்தை இயக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டனர் .

யானையை வாகனத்தில் துரத்திய ஒளி பதிவு காட்சி வனத்துறையினரிடம் சிக்கியது. பின்பு விசாரனை மேற்கொண்ட வனத்துறையினர் யானையிடம் அத்துமீறியதாக கூறி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் இது போன்று இனி வன விலங்குகளிடம் அத்துமீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 0

0

0