பூட்டியிருந்த கடையில் விலை உயர்ந்த செல்போன்களை திருடிய இளைஞர்கள் : காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2021, 2:52 pm
Cellphone Theft - Updatenews360
Quick Share

திருப்பூர் : அவிநாசியில் பூட்டியிருந்த செல்போன் கடையினுள் புகுந்து 50 ஆயிரம் மதிப்பிலான செல்போன்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா அலுவலகம் எதிரே பகீம் ரகுமான் என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையை வழக்கம்போல இரவு பூட்டிவிட்டு சென்ற சூழ்நிலையில் கடந்த 15ஆம் தேதி நள்ளிரவில் கடை பூட்டை உடைத்து புகுந்த 2 மர்ம நபர்கள் கடைக்குள் இருந்த செல்போன் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் என ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

இந்த காட்சிகள் கடையினுள் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானதை அடுத்த பகீம் ரகுமான் அவிநாசி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 467

0

0