பப்ஜி மதன் மனைவி கிருத்திகாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்…

16 June 2021, 10:29 pm
Madhan Wife Arrest - Updatenews360
Quick Share

சென்னை: தற்போது தலைமறைவாக உள்ள பப்ஜி மதனின் யூ டியூப் சேனல் நிர்வாகியாக இருந்த அவரது மனைவியை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவரை வரும் வரும் 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமறைவாக உள்ள யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மதனின் சேனலுக்கு நிர்வாகியாக செயல்பட்டதால் போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். போலீசார் விசாரணையில் மதன் நடத்தும் யூடியூப் சேனலின் அட்மினாக அவரது மனைவி கிருத்திகா இருப்பது தெரியவந்தால், கிருத்திகாவை கைது செய்த காவல் துறையினர், அவரை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். கிருத்திகாவிடம் விசாரணை நடத்திய நீதிபதிகள் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை கிருத்திகாவை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர்.

Views: - 146

0

0