வண்டலூர் பூங்காவில் ஜிகா வைரஸ்? அடுத்தடுத்து மடியும் உயிரினங்கள் : சிங்கத்தை தொடர்ந்து 5 நெருப்பு கோழிகள் பலி!!!
Author: Udayachandran RadhaKrishnan28 October 2021, 3:39 pm
சென்னை : வண்டலூர் பூங்காவில் வயது முதிர்வின் காரணமாக பெண் சிங்கம் உயிரிழந்த நிலையில் 5 நெருப்பு கோழிகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் நேற்று முன் தினம் வயது முதிர்வின் காரணமாக கவிதா என்ற 19வயது பெண் சிங்கம் உயிரிழந்துள்ளது. சில மாதங்களாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் உயிரிழந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதே போல் நேற்று 5 நெருப்பு கோழிகளும் உயிரிழந்துள்ளது. 5 நெருப்பு கோழிகளும் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால், இறப்பிற்கான காரணம் குறித்து அறிந்து கொள்ள பூங்கா நிர்வாகம் பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
அதன் முடிவுகள் வந்ததும் உயிரிழப்பிற்கான தகவல் தெரியவரும் என தெரிவித்தனர். அதன் பிறகு செய்தி குறிப்பு கொடுப்பதாகவும் தெரிவித்தனர். கேரளாவில் ஜிகா வைரஸ் காரணமாக கால்நடைகள், உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் சென்னை வண்டலூர் பூங்கா நிர்வாகிகள் அச்சத்தில் உள்ளனர்.
0
0