முறையாக அழைப்பு வந்தால் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்கும் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan18 September 2024, 1:59 pm
கள்ளக்குறிச்சியில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில், செவ்வாய்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி, சுமார் 100 பேர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அதிமுகவில் இணைந்தனர்.
இதில், மிலாடி நபி நாளில் இஸ்லாமியர்கள் அதிகளவில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை பொறுத்தவரை எங்களுக்கு திமுகதான் எதிரணி. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரப்போகிறது.
மேலும் படிக்க: மது ஒழிப்பு மாநாடு.. திருமாவளவனை ஏமாற்றும் திமுக : சொல்கிறார் பாஜக பிரமுகர் கே.பி ராமலிங்கம்!
அதற்காக, நல்ல மனமுடையவர்கள், எங்கள் கட்சியோடு ஒத்துப்போகின்ற ஒற்றை கருத்துடைய கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு வந்தால் நாங்கள் இணைத்துக் கொள்வோம். அவர்களோடு சேர்ந்து, அதிமுக சிறந்த ஆட்சியைக் கொடுக்கும்.
விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள எங்களுக்கு முறையாக அழைப்பு விடுத்தால் கட்சியின் மூத்த தலைமைக் கழக நிர்வாகிகளோடு கலந்துபேசி முடிவு செய்யப்படும் என்றார்.