லண்டன் போன அண்ணாமலை ஒரு போட்டோ கூட போடலயே? காரணம் இதுதானா?

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2024, 6:53 pm

அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில்.. அந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக பாஜக மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதே போல எஸ்ஆர் சேகர், கனகசபாபதி, சக்கரவர்த்தி, ராம.சீனிவாசன், முருகானந்தம் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு பாஜகவில் பழைய மூத்த நிர்வாகியான எச். ராஜா கை மீண்டும் உயர தொடங்கி உள்ளது.

உதாரணமாக நேற்று பேட்டி அளித்த எச். ராஜா, பழனியில் நடைபெற்றது முருகன் மாநாடு அல்ல; அது இந்து விரோத மாநாடு; முருகனை வைத்து தமிழ்நாட்டில் ஏமாற்று அரசியல் செய்வதை இந்துக்கள் ஏற்க மாட்டார்கள் என்று பேட்டி அளித்துள்ளார்.

இத்தனை நாட்களாக பெரிதாக பேட்டி கொடுக்காமல் அமைதியாக இருந்த எச். ராஜா திடீரென இப்படி பேட்டி அளித்துள்ளது கவனம் பெற்றுள்ளது. அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில் அவரை வரவேற்று யாரும் புகைப்படங்களை வெளியிடவில்லை.

பாஜக அதிகாரபூர்வ பக்கமோ, அண்ணாமலையே, இந்த பயணம் பற்றிய புகைப்படங்களை வெளியிடவில்லை. அவர் லண்டன் சென்று ஒரு வாரம் ஆகியும் கூட அமைதியின் உச்சத்தில் இருக்கிறார். இதுவரை ஒரு புகைப்படம் கூட அவர் சார்பாக வெளியிடப்படவில்லை.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?